”கருங்கல்பாளையம் வாசிப்பு அறை” என வழங்கப்பட்ட இந்நூலகம், மகாகவி சுப்ரமணி பாரதி அவர்கள் 1921 ஆம் ஆண்டு வருகைபுரிந்த பின்னர் மகாகவி பாரதி நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மகாகவி பாரதி நினைவு நூலகம் என வழங்கப்படும் இந்நூலகம், ஈரோடு நகரின் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ளது. 1921 ஜூலை 31 அன்று “மனிதனுக்கு மரணமில்லை” எனும் தலைப்பில் உரை ஒன்றை ஆற்றுவதற்காக கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு பாரதியார் வருகை தந்தார். ஒரு சில வாரங்கள் கழித்து அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். கருங்கல்பாளையத்தில் ஆற்றிய உரையே அவரது கடைசி பொது உரையாக இருந்தது.
இந்நூலக்த்தின் சிறப்பாக, பாரதியார் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், மற்றும் அவர் பொதுக்கூட்டங்களில் தேசிய விடுதலை, பெண் சுதந்திரம் பற்றி ஆற்றிய உரைகள், அவரது ஓவியங்கள் போன்றவற்றை இந்நூலகம் தன்னகத்தே வைத்திருக்கின்றது. மேலும், பாரதியார் “சுதேசமித்திரன்” எனும் தினப்பத்திரிகைக்கு எழுதிய ஆக்கங்கள் அனைத்தும் இந்நூலகத்தில் காணப்படுகின்றது.
நுலகக் கட்டிடத்திற்கு அப்பால், பாரதியார் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கும்வகையில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஓர் அருங்காட்சியகத்தையும் இந்நூலகம் கொண்டுள்ளது.
நூலக முகவரி
மகாகவி பாரதி நினைவு நூலகம்,
கருங்கல்பாளையம், பூங்குன்றனார் தெரு,
எஸ்.பி.ஐ காலணி, திருநகர் காலணி,
ஈரோடு, தமிழ்நாடு – 638003