புதிய முனைப்புகள்

1. போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவஇதழ்கள்

போட்டித் தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னணி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில்  32 மாவட்ட மைய நூலகங்களுக்கு 61 பருவ இதழ்களும், 241 முழுநேர கிளை நூலகங்களுக்கு    34 பருவ இதழ்களும் மற்றும் 320 கிளை நூலகங்களுக்கு    19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.

 

2. அச்சு மற்றும் இணைய வழி நூல்கள் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.1.30 கோடி மதிப்பில் அச்சு மற்றும் இணைய வழியான நூல்கள், தேசிய மற்றும் சர்வதேச பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் வாங்கப்பட்டுள்ளன.