ஜி.எஸ்.சாமிநாதன் செட்டியார் அவர்களால், அவரது தாத்தா கோபுசிவகுரு நாதன் செட்டியார் பெயரில் 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட இந்நூல்கத்தில், தமிழ் இலக்கியம், அறிவியல், வரலாறு தொடர்பான 35 ஆயிரம் அரிய தமிழ் நூல்கள் காணப்படுகின்றன. குறிப்பிடும்படியாக, 1956-ல் பிரசுரமான நாடிஜோதிடம் ஒவ் வொரு லக்னத்துக்கும் தனித்தனி தொகுதி புத்தகங்களாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் 2 ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன. அதேபோல 1800- 1900 கால தமிழ் இலக்கியம், 1930-ல் பிரசுரிக்கப்பட்ட மாணிக்க வாசகனார் வரலாறு, 1932-ல் பிரசுரமான சேதுபுராணம், 1949-ல் பிரசுரமான தமிழர் பண்பாடு, 1910 முதல் 2016 வரையிலான மருத்து வக்குடி பஞ்சாங்கம் உள்ளிட்ட பல புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நூலக முகவரி
23-24, நாணயக்கார தெரு,
தாராசுரம், கும்பகோணம்,
தமிழ்நாடு -612001