ஞானாலயா நூலகம், புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கருகிலுள்ள திருக்கோகர்ணம் என்ற ஊரில் அமைந்துள்ள ஞானாலயா ஆய்வு நூலகம் தமிழ்நாட்டின் முக்கியமான தனியார் நூலகங்களிலொன்றாகும். 1959 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது இந்நூலகத்தில் தற்சமயம் சுமார் 90,000 அரிய தமிழ் புத்தகங்கள் உள்ளன. இவை தவிர முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்து கடிதங்களும் உள்ளன. மேலும், 1920 முதல் 2010 வரை வெளியான தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் மிக அதிக அளவில் உள்ளன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவரது மனைவி டோரதியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

நூலக முகவரி

பழனியப்பா நகர்,

புதுக்கோட்டை,

தமிழ்நாடு – 622005

தொலைப்பேசி: 04322 221 059