நூலக நிகழ்வுகள்

”போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி”

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை 11.00 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், குடிமைப் பணித்தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணயம், ஆசிரியர் தேர்வு ஆணையம், வங்கிப் பணிகள் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி “www.youtube.com/aclchennai” இணைய முகவரியில் நேரலையிலும் ஒளி பரப்பப்படுகிறது.

”போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு
https://www.youtube.com/playlist?list=PLaSmVf_HqVd1LAqJS4UqSc304A0csFO8p

“பொன்மாலைப்பொழுது – வாரம் ஓர் ஆளுமையுடன்”

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி “www.youtube.com/aclchennai” இணைய முகவரியில் நேரலையிலும் ஒளி பரப்பப்படுகிறது.

பொன்மாலைப்பொழுது நிகழ்வில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு.
https://www.youtube.com/playlist?list=PLaSmVf_HqVd01bPhJzUsH9ymd8J6GOYp5

குழந்தைகளுக்கான நிகழ்வுகள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 11.00 மணிக்கு, குழந்தைகளுக்கான கதை சொல்லி, இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், யோகா, ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா, புத்தகங்களை பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி மற்றும் காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களைக்கொண்டு இலவசமாக நடத்தப்பட்டுவருகிறது.

”சிந்தனை முற்றம்”

கரூர் மாவட்ட மைய நூலகத்தில்,  அந்நூலகத்தின் வாசகர் வட்டத்தின் உதவியுடன், “சிந்தனை முற்றம்” என்ற பெயரில் தொடர் இலக்கிய நிகழ்வுகள், மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.  பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்கள்,  சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சொற்பொழிவாற்றி வருகின்றனர்.

“சிந்தனைச் சாரல்”

 

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து மாதந்தோறும் மூன்றாம் ஞாயிற்று கிழமையில் காலை 10 மணி முதல் 12 மணி முடிய சிந்தனைச் சாரல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்த மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தி பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களை சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. அதேபோல் இந்நிகழ்வில் நாட்டுப்புற கலைகள், நுhல் அறிமுகங்கள், நூல் வெளியீடுகள், உள்ளூர் எழுத்தாளர்களை கவுரவித்தல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் (குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை), தனித்திறன் பெற்ற மாணவர்களை அறிமுகம் செய்தல், மாணவ விஞ்ஞானிகளை கண்டறிந்து கவுரவித்தல், சாதனையாளர்களை கவுரவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் இச்சிந்தனைச் சாரலில் இடம்பெறும்.