பொது நூலக இயக்ககம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மக்கள் தொகை கொண்ட நூலகங்கள் இல்லாத கிராமங்களில், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த ஊர் பொது மக்கள் / ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்து பெறப்பட்டு பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
நிபந்தனைகள்
(i) நூலகம் செயல்பட வாடகையில்லா இலவசக் கட்டடம் நூலக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
(ii) சொந்தக் கட்டடம் கட்ட 5 சென்ட் காலிமனை நூலக ஆணைக்குழுவிற்கு இலவசமாக பத்திரப்பதிவு செய்து பெறப்பட வேண்டும்.
(iii) தலா ரூ.1,000/- வீதம் நன்கொடையாக செலுத்தி 2 நபர்கள் புரவலர்களாக சேர்க்கப்பட வேண்டும்.
(iv) நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.20/-ம் ஆண்டு சந்தா ரூ.10/- ஆக மொத்தம் ரூ.30/- செலுத்தி 200 நபர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.(v) சுமார் ரூ.2,000/- மதிப்புள்ள தளவாடங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.