தமிழ் நூல் காப்பகம், விருத்தாசலம்

புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில், தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் பயன்படக் கூடிய தமிழ்க் கலைக் களஞ்சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், பல்சமய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், இந்திய பேரிதிகாசங்களான வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மற்றும் கம்பன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. 250 ஆண்டுகளுக்கு முன் 1756-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம், பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிப்பு, பல்வேறு கிடைப்பதற்கரிய பதிப்புகள், கம்பராமாயணத்தின் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகள் என பல முதல் பதிப்பு நூல்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இங்கு உள்ளன. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கூழங்கை தம்பிரான் எழுதிய நன்னூல் உரையை ஜெர்மனியில் கண்ட தாமோதரன் என்பவர், அந்த நூலை அச்சுப் பிரதிகள் இல்லாத காரணத்தினால் அதை கைப்பட எழுதி வெளியிட்ட புத்தகமும் இந்த காப்பகத்தில் உள்ளது.

நூலக முகவரி

பல்லடம் மாணிக்கம்,

தமிழ்நூல் காப்பகம்,

சேலம் நெடுஞ்சாலை,

விருத்தாசலம் – 606001:

செல்பேசி: 9443042344.