பொது நூலக இயக்ககம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மக்கள் தொகை உள்ள நூலகங்கள் இல்லாத கிராமங்களில், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த ஊர் பொது மக்கள் / ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் பொதுநூலகத்துறையால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்து பெறப்பட்டு முதற்கட்டமாக பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
அவ்வாறு திறக்கப்படும் பகுதிநேர நூலகங்கள், அந்நூலகத்திற்கு வருகைபுரியும் வாசகர்கள் வருகை, உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில், அதிக பயன்பாடுடைய பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகவும், அதன்பின்னர், மேற்படி ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் தரம் உயர்த்த ஆணை வழங்கப்பட்டு, கிளை நூலகங்களாகவும்,
அதன்பின்னர், நூலக பயன்பாட்டினை பொறுத்து கிளை நூலகங்கள் வாசகர்களின் நலன் கருதி, தரம் உயர்த்த ஆணை வழங்கப்பட்டு, முழுநேர கிளை நூலகங்கள் செயல்படுத்தப்படுகின்றன.