ரோஜா முத்தையா நூலகம், சென்னை

ரோஜா முத்தையா செட்டியாரால் 1950களிலிருந்து 1990கள் வரை சேர்க்கப்பட்ட அரிய தமிழ் நூல்களைக்கொண்டு,   ரோஜா முத்தையா நூலகம் 1994 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது.  தமிழ் மொழி வாயிலாக மானுடவியல், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்நூலகம் உலகிலுள்ள மிக முக்கியமான தனியார் நூலகங்களிலொன்றாக கருதப்படுகிறது. தமிழ் மொழியின் பல அரிய அச்சு நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில்  சுமார் 3 இல்டசம் புத்தகங்கள், பருவ இதழ்கள், நாளிதள்கள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவை காணப்படுகின்றன.

நூலக முகவரி:

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,

3வது குறுக்குச் சாலை,

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி,

சென்னை 600113.

தொலைப்பேசி: (044) 2254-2551 & 2254-2552

மின்னஞ்சல்: rmrl@dataone.in