தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககத்தால் உருவாக்கப்பட்டுள்ள வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையதளம், தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களுடன் பதிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களை இணைப்பதன் மூலமும், புத்தக சமர்ப்பிப்புகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், புத்தகங்களின் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலமும், பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த இணையதளமானது, புத்தகங்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில், துறைசார் நிபுணர்களின் மதிப்புரைகள், நூலகர்கள் மற்றும் வாசகர்களின் மதிப்புரைகள் மற்றும் நூலகங்களிலுள்ள வாசகர் வட்டங்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
நூலகங்களில் மக்கள் விரும்பும் புத்தகங்கள் கிடைப்பதையும், வாசிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதையும், இலக்கிய சமூகத்தை ஆதரிப்பதையும் இந்த முயற்சி உறுதி செய்கிறது. தெளிவான விதிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மூலம், நூலகங்களுக்கான புத்தக் கொள்முதலை பன்முகப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த இணையதளம் வலுப்படுத்துவதுடன், சமூகத்தின் அறிவுசார் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.