இயக்ககத்தைப் பற்றி

இயக்ககத்தைப் பற்றி

“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின்  சேவையை  மேம்படுத்தும் நோக்கில்    1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.

1. கன்னிமாரா பொது நூலகம் 1
2. அண்ணா நூற்றாண்டு நூலகம் 1
3. மாவட்ட மைய நூலகங்கள் 32
4. முழு நேர கிளை நூலகங்கள் 314
4. கிளை நூலகங்கள் 1612
5. நடமாடும் நூலகங்கள் 14
6. ஊர்ப்புற நூலகங்கள் 1915
7. பகுதி நேர நூலகங்கள் 751
மொத்தம் 4640

இவை தவிர, மக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் கடவுச் சீட்டு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.