செய்திக் குறிப்பு
சுய விவர படிவத்தை பதிவிறக்கம் செய்ய Click Here
பொது நூலக இயக்ககம் செய்திக் குறிப்பு 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ. 25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தும் வகையில், பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில், கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியிலிருந்து சுய விவர படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து 31.12.2021க்குள் தங்களது படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002. என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. வே. தினேஷ் குமார் (அலைபேசி எண். 99414 33630) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
விதிமுறைகள் :
1. வயது வரம்பு – 13 வயது முதல் 18 வயது வரை
2. கட்டுரை அல்லது சிறுகதை தலைப்பு – தலைப்பு படைப்பாளிகளின் விருப்பம்
3. பக்க அளவு – படைப்பாளிகளின் விருப்பம்
குறிப்பு :
1. சுய விவரம் படிவம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
2. கட்டுரை அல்லது சிறுகதை தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
3. தங்களின் படைப்புகள் கையெழுத்து பிரதியாகவோ, தட்டச்சு செய்யப்பட்டோ இருக்கலாம்.
மின்னஞ்சலில் அனுப்ப:
1. சுய விவர படிவத்தை பூர்த்தி செய்து, தங்களது படைப்புகளுடன் PDF வடிவில் மட்டுமே dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.